பி.எம்.இந்தியா

கடந்த கால நிர்வாகச் செயல்பாடு

தேடு
 • பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: கற்பிப்போம்

  பெண் குழந்தையைப் பாதுகாப்போம்: கற்பிப்போம்

  ஆணும் பெண்ணும் சமம் தான் என்பது நமது மந்திரம் "பெண் குழந்தை பிறந்த நாளை எல்லோரும் கொண்டாடுகிறோம். நமது மகள்களின் பிறப்பையும் நாம் சமமான பெருமிதத்துடன் கொண்டாடுவோம். உங்கள் பெண்குழந்தை பிறந்தநாள் விழாவை கொண்டாடும் நேரத்தில் அவளுக்காக 5 மரக்கன்றுகளை நடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்." பிரதமர் நரேந்திமோடி தான் தத்தெடுத்த ஜெயபூர் கிராமத்தில் நாட்டு மக்களுக்கு சொன்ன வேண்டுகோள் தான் இது. பெண் குழந்தையை பாதுகாப்போம், கற்பிப்போம் (பி.பி.பி.பி) திட்டம் அரியானா மாநிலம் பானிபட்டில் 2015ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி பிரதமர் நரேந்திரமோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பெண்குழந்தை பிறப்பு விகிதக்குறைபாடு, மற்றும் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், மத்திய மனிதவள மேம்பாடு ஆகிய மூன்று அமைச்சகங்களின் ஒத்துழைப்போடு இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் பிரதான அம்சமே பெண் ...

 • ஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி

  ஜன்தன், ஆதார் மொபைல் ”ஜாம்” ஊக்க சக்தி

  அனைவருக்கும் வங்கிக்கணக்கு, ஆதார், மொபைல் ஆகிய மூன்றும் இணைந்த ஜாம் திட்டத்தின் பார்வை பல திட்டங்களின் அடிப்படை அஸ்திவாரமாக அமையும். என்னைப் பொருத்தவரை ஜாம் என்பது அதிகபட்ச சாதனை என்பதாகும் ஒவ்வொரு ரூபாய் செலவிலும் அதிகபட்ச மதிப்பு இருக்க வேண்டும். நமது நாட்டு ஏழைகளுக்கு அதிகபட்ச அதிகாரம் அளிக்க வேண்டும். இந்த மக்களின் மத்தியில் அதிகபட்ச தொழில்நுட்பம் ஊடுருவ வேண்டும்.” – இது பிரதமர் நரேந்திர மோடியின் உரை. நாடு சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிய பிறகும், பெரும் அளவு மக்களுக்கு வங்கிச் சேவைகள் கிடைக்கவில்லை. இதற்கு என்ன அர்த்தம் என்றால் அவர்களுக்கு சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை, அவர்கள் கணக்கில் பணம் சேருவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தான் பிரதமர் மோடி பிரதம மந்திரியின் ஜன்தன் யோஜனா எனப்படும் வங்கிக்கணக்குத் திட்டத்தினை ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்கி வைத்து இந்த அடிப்படை விஷயத்தை அறியப்படுத்தினார். இந்த திட்டம் தொடங்கப்பட்டதன் ...

 • எம்.பி.க்கள் மாதிரி கிராமத் திட்டம்

  எம்.பி.க்கள் மாதிரி கிராமத் திட்டம்

  நாடாளுமன்ற உறுப்பினர்களின் மாதிரி கிராமத் திட்டமான சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தினை பிரதமர் மோடி தொடங்கி வைத்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார். "நமது நாட்டில் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் அது வினியோக அடிப்படையில் இருப்பதுதான். ஒரு திட்டம் லக்னோவுக்காக தொடங்கப்பட்டால் அது பிற இடங்களிலும் திணிக்கப்படுகிறது. இதை மாற்றும் வகையில் விநியோக அடிப்படையில் அல்லாமல் தேவையின் அடிப்படையில் வளர்ச்சியை கொண்டு செல்வது தான் ஆதர்ஷ் கிராம யோஜனா திட்டம். ஏனென்றால் இப்போதைய அவசிய தேவை கிராமங்களின் வளர்ச்சிதான்." நாம் அனைவரும் நமது மனோநிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்களின் இதயங்களில் நாம் ஒன்றிப்பாக வேண்டும். ஏனென்றால் பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவார்கள். இதற்கு அப்பால் அவர்கள் கிராமங்களுக்கு வந்தால். அவர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை. அங்கே அவர்கள் ஒரு குடும்பமாகத் தான் இருக்கிறார்கள். கிராம மக்களோடு சேர்ந்து முடிவு எடுக்கிறார்கள். இது கிராம மக்களை ...

 • இந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலை கொண்டுவருதல்

  இந்தியாவின் தொழில்முனைவு ஆற்றலை கொண்டுவருதல்

  இந்தியாவில் ஏராளமான தொழில்முனைவுத் திறன் சக்தியைக் கொண்டுள்ளதால், இது உரிய முறையில் பயன்படுத்தப்பட்டால் நாம் வேலை தேடுவோர் கொண்ட நாடாக இல்லாமல் வேலை தரும் நாடாக மாறமுடியும் என நான் நம்புகிறேன். - நரேந்திர மோடி. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொழில்முனைவுக்கு ஊக்கம் தருவதில் கண்ணோட்டம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் தயாரிப்போம் முயற்சி என்பது நான்கு தூண்களின் அடித்தளத்தில் இந்தியாவில் உற்பத்தி துறையில் மட்டும் இன்றி இதர துறைகளிலும் தொழில்முனைவுக்கு ஊக்கமளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகிறது. புதிய நடைமுறைகள் : தொழில்முனைவை மேம்படுத்துவதற்கான ஒரு மிக முக்கியமான அம்சமாக எளிதாக வர்த்தகம் செய்வதை இந்தியில் தயாரிப்போம் அங்கீகரிக்கிறது. புதிய உள்கட்டமைப்பு : நவீன மற்றும் வசதிமிக்க உள்கட்டமைப்பு இருப்பது தொழில் துறையில் வளர்ச்சிக்கு ஒரு முக்கியமான தேவையாகும். நவீன உயர் வேக தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து ஏற்பாடுகளுடன் அதிநவீன தொழில்நுட்பம் அடிப்படையிலான உள்கட்டமைப்புக்களை அளிக்க தொழில் வழித்தடங்கள் மற்றும் அதிநவீன நடகரங்களை ...

 • தூய்மை கங்கை

  தூய்மை கங்கை

  அன்னை கங்கையை தூய்மை படுத்தும் பணியை மேற்கொள்வதில் நான் பேருவகை கொள்கிறேன். 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் வெற்றி பெற்ற பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தில் கங்கை நதிக்கரையோரம் பேசுகையில் கூறிய வாசகம் தான் இது. கங்கை நதி அதன் புனிதத்தினாலும், கலாச்சார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் அது முக்கியத்துவம் பெற்றதாகிறது .2014ம் ஆண்டு நியூயார்க்கில் மாடிசன் சதுக்கத் தோட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாம் கங்கையை சுத்தப்படுத்தினால் அது 40 சதவீத இந்திய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்று கூறினார். எனவே கங்கையை சுத்தப்படுத்தும் பணியும் ஒரு முக்கியமான பொருளாதார நிகழ்ச்சி தான். பிரதமரின் இந்த கூற்றை நனவாக்கும் வகையில் இந்திய அரசு கங்கையை சுத்தப்படுத்தி மாசுகளை அகற்றும் பெரும் திட்டமான நமாமி கங்கை திட்டத்தை அறிவித்துள்ளது. ...

 • இந்தியாவின் வளர்ச்சி

  இந்தியாவின் வளர்ச்சி

  நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாக இன்னமும் இருளில் இருக்கும் 18 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதி ஏற்படுத்தி தரும் லட்சியத்திட்டத்தை இந்தியா உருவாக்கி உள்ளது. இந்திய சுதந்திர தின உரையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மின்சாரம் இல்லா எல்லா கிராமங்களுக்கும் இன்னும் ஆயிரம் நாட்களில் மின் இணைப்பு கொடுக்கப்படும் என்று அறிவித்தார். ஊரக மின் மயமாக்கல் திட்டம் பரவலாக விரைந்து மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு வெளிப்படைத் தன்மையாகவும் நேர்மையாகவும் திட்டம் செயல் வடிவம் பெறுகிறது. எந்தெந்த கிராமங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளது என்ற விவரங்கள் செல்போன் செயலி (மொபைல் ஆப்ஸ்), வலைத்தளம் பயன்பாடு மூலமும் தெரிந்து கொள்ள முடியும். அதுவும் அந்த கிராமத்திற்கு மின்சாரம் சென்றடைந்த பின்னர் தான் தகவல் வரும். கிராமப்புற மக்களின் வாழ்வாதார மேம்பாடு, எதிர்பார்ப்பு, கனவுகள் ஆகியவற்றை நிறைவேற்றும் முக்கிய அம்சமாகவும் இத்திட்டம் செயல்படுகிறது. இந்திய வரலாற்றில் 2012ம் ஆண்டு ...

 • இந்திய பொருளாதாரத்தை விரைந்த பாதையில் அமைத்தல்

  இந்திய பொருளாதாரத்தை விரைந்த பாதையில் அமைத்தல்

  இந்த ஆண்டு இந்திய பொருளாதாரத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டு. குறைந்த வளர்ச்சி, உயர் பண வீக்கம், உற்பத்தி குறைந்து வருதல், என்ற காலம் நீங்கி பெருமப் பொருளாதார அடிப்படைகள் வலுவடையச் செய்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, மேலும் பொருளாதாரத்தை உயர் வளர்ச்சி பாதைக்கு இட்டுச் சென்று இந்தியாவில் மொத்த உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் 74 சதவீதமாக உயரச் செய்துள்ளது அது. உலகின் பெரிய பொருளாதாரங்களில் மிக விரைவான வளர்ச்சி வீதம் இது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் அடுத்த சில ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி வீதம் மளமளவென உயர்ந்துவிடும் என்று பல்வேறு பொருளாதார தர நிர்ணய முகமைகளும், சிந்தனைக்குழாம்களும் கருத்துத் தெரிவித்துள்ளன. வங்கித்துறை வலுவான அடிப்படைகளில் உள்ளதாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சீர்திருத்தங்களை மேற்கொண்டிருப்பதாலும் ‘மூடீஸ்’ முகமை இந்தியாவின் தரத்தை ‘நிலையானது’ என்பதிலிருந்து ‘நேர்மையானது’ என சமீபத்தில் உயர்த்தியுள்ளது. பிரிக்ஸ் (BRICS) அமைப்பு ...

 • வளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது

  வளமிக்க இந்தியாவிற்கு விவசாயிகளை வலுப்படுத்துவது

  விவசாயத்திற்கு பெருக்கம் அளிக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் நமது நாட்டின் முதுகெலும்பாக எப்போதுமே விவசாயிகள்தான் இருந்து வருகின்றனர். புத்தம்புதிய, உறுதியான நடவடிக்கைகள் மூலம் நாட்டின் இந்த முதுகெலும்பை மேலும் வலுப்படுத்தவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயன்று வருகிறது. பாசன வசதிகளை உறுதிப்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்திக்கு ஊக்கமளிப்பதாக பிரதமரின் விவசாய மேம்பாட்டு திட்டம் அமைகிறது. அனைத்து விவசாய நிலங்களுக்கும் ஏதாவதொரு வகையில் பாசன வசதியை உறுதி செய்வதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். ‘ஒவ்வொரு சொட்டு நீருக்கும் மேலும் அதிகமான பயிர் விளைச்சல்’ என்பதை செயல்படுத்தும் வகையில் விவசாயிகளுக்கும் நவீன பாசன வழிகள் குறித்து பயிற்சி வழங்கப்படும். விவசாயிகள் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் பாரம்பரிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு இந்திய பகுதியில் இயற்கை விவசாயத்தை வளர்க்கவும், இயற்கை விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை ஏற்றுமதி செய்யவும் ஊக்கமளிக்கும் விதத்தில் சிறப்புத் திட்டம் ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீடித்த வகையில் குறிப்பிட்ட பயிர்களை ...

 • வெளிப்படையான தன்மை உருவாகியுள்ளது

  வெளிப்படையான தன்மை உருவாகியுள்ளது

  கடந்த 10 ஆண்டுகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் கொள்கை ஏதும் இல்லாமல் தன்னிச்சையான முடிவுகள், ஊழல்கள் ஆகியவை இருந்ததாக பல்வேறு கதைகள் நிலவின. ஆனால், சென்ற ஆண்டு இதில் வரவேற்கத் தக்க மாறுதல் ஏற்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு குறித்து, உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையடுத்து, மத்திய அரசு தற்போது ஏலங்கள் குறித்த செயல்பாடுகளை வெளிப்படையாக்கியுள்ளது. 67 நிலக்கரி சுரங்கங்களை ஏலமிட்டு ஒதுக்கீடு செய்த்தன் மூலம் அரசுக்கு ரூ.3.35 லட்சம் கோடி வருமானம் கிடைத்தது. இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் கூறியது: “ஏலமிடும் முறை திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. இது தன்னிச்சையாகவோ, அல்லது முறையற்றதாகவோ இல்லை என்பது எங்களுக்கு தெரிய வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட நபரையோ, அல்லது நிறுவனத்திற்கோ சாதகமாக இந்த ஏலமுறை இருந்ததாக குற்றச்சாட்டு எதுவும் இல்லை.” ஸ்பெக்டிரம் ஏலம் முறையிலும் அரசுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் இழப்பு எதுவும் ...

 • பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி

  பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி

  கல்வி, மற்றும் திறன் மேம்பாட்டிற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அதிக முக்கியத்துவத்தை அளித்துள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரதம மந்திரியின் வித்யா லஷ்மி கார்யகிரம் திட்டத்தின் மூலம் கல்விக்காக அளிக்கப்படும் கடன்கள் மற்றும் உதவித் தொகை ஆகியவற்றை கண்காணிக்க நிதியுதவி ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த பண்டித மதன் மோகன் மாளவியா இயக்கத்தின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள், ஆசிரியர்கள் ஆகியோர்களை வரவழைக்கும் வகையில் உலகளாவிய கல்விக்கான முயற்சி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஸ்வயம் திட்டத்தின் கீழ் ஆன் லைன் முறையில் கல்வி கற்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கல்விக்குத் தேவையான புத்தகங்கள் போன்றவற்றை பயன்படுத்த இ-நூலகம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஷாலா தர்பன் என்ற திட்டத்தின் மூலம் பள்ளியில் படிக்கும் ...

 • ஏற்றம்...