பி.எம்.இந்தியா

திரு. விஷ்வநாத் பிரதாப் சிங்

டிசம்பர் 2, 1989 - நவம்பர் 10, 1990 | ஜனதா தளம்

திரு. விஷ்வநாத் பிரதாப் சிங்

திரு. வி.பி. சிங் 1931, ஜூன் 25 அன்று அலகாபாத்தில் திரு. ராஜா பகதூர் ராம் கோபால் சிங்கிற்கு மகனாக பிறந்தார். இவர் அலகாபாத் மற்றும் பூனா பல்கலைகழகங்களில் பயின்றார். திருமதி. சீதா குமாரியை 1955, ஜூன் 25 அன்று மணந்தார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

      பெரும் கல்வியாளரான இவர் அலகாபாத் கரோனில் கோபால் வித்யாலயா என்ற கல்லூரியை தோற்றி வித்தார். வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் 1947-48 ஆண்டில் மாணவர் சங்க தலைவராக இருந்தார். மேலும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் மாணவ சங்க துணை தலைவராகவும் பதவிவகித்தார். 1957-ல் பூதான் இயக்கத்தில் ஆர்வத்தோடு பங்கேற்றார். இதற்காக அலாகாபாத்தில் உள்ள பாஸ்னா கிராமத்தில் மிகவும் பிரபலமான பண்ணையைத் தானமாக கொடுத்தார்.

      இவர் அனைத்து இந்திய காங்கிரஸ் குழுவில் உறுப்பினராக இருந்தார். மேலும், 1969-71 வரை அவர் அலகாபாத் பல்கலைக்கழகத்தின் நிர்வாக குழுவிலும் உத்திர பிரதேசத்தின் சட்ட மன்றத்திலும் உறுப்பினராக இருந்தார். 1970 முதல் 1971 வரை காங்கிரஸ் சட்டமன்ற கட்சியில் கொரடாவாக இருந்தார். அதேபோல் 1971 முதல் 1974 வரை மக்களவை உறுப்பினராக பணிபுரிந்தார். 1974 அக்டோபர் முதல் 1976 நவம்பர் வரை மத்திய வர்த்தக துணை அமைச்சராகப் பணியாற்றிய இவர் 1976 நவம்பர் முதல் 1977 மார்ச் வரை மத்திய வர்த்தக இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். 1980 ஆம் ஆண்டு ஜனவரி 3 முதல் ஜூலை 26 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தார். ஜூன் 9, 1980 முதல் ஜூன் 28,1982 வரை உத்திர பிரதேச முதல் அமைச்சராகப் பணியாற்றினார். அதேபோல் 1980, நவம்பர் 21 முதல் 1981 ஜூன் 14 வரை உத்திர பிரதேசத்தின் சட்டக்குழுவின் உறுப்பினராகவும், 1981 ஜூன் 15 முதல் 1983 ஜூலை 16 வரை சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

      1983 ஜனவரி 29 அன்று மத்திய வர்த்தக அமைச்சராக இருந்த அவர் 1983 பிப்ரவரி 15 அன்று விநியோக துறை அமைச்சராகக் கூடுதல் பொறுப்பாக ஏற்றார். 1983 ஜூலை 16 அன்று மாநிலங்கள் அவை உறுப்பினராக பொறுப்பேற்ற இவர் செப்டம்பர் 1,1984 அன்று உத்திய பிரதேச காங்கிரஸ் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டிசம்பர் 31, 1984 அன்று மத்திய நிதி அமைச்சரானார்.