பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அர்ஜென்டினாவின் போனஸ் அயர்சில் டிசம்பர் 10-13, 2017-ல் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11-வது அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அர்ஜென்டினாவின் போனஸ் அயர்ஸ் நகரில் டிசம்பர் 2017-ல் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11-வது அமைச்சர்கள் மட்டத்திலான கருத்தரங்கில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாட்டுக்கும், வர்த்தகத் துறை சமர்ப்பித்த குறிப்புக்கும் செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கின்போது, இந்தியாவின் நலன் மற்றும் முக்கியத்துவத்தை பாதுகாக்கவும், பிரச்சினைகள் அடிப்படையிலும், நிலைப்பாட்டை மேற்கொண்டு இந்தியா செயல்படுத்தியது.

பின்னணி

இந்த கருத்தரங்குக்கு முன்னதாக, பாலி/நைரோபி செயல்பாடுகள் மற்றும் பிற வேளாண்மை பிரச்சினைகளின் அடிப்படையில், உணவு பாதுகாப்பு நோக்கத்துக்காக பொது சேமிப்பை மேற்கொள்ளும் விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. உலக வர்த்தக அமைப்பின் சில உறுப்பு நாடுகள், சேவைகளில் உள்நாட்டு ஒழுங்குமுறைகள், மீன்வள மானியம், மின்னணு வர்த்தகம், முதலீட்டு வாய்ப்பு மற்றும் குறு, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் ஆகியவற்றில் நெறிமுறைகள் குறித்த முடிவுகளை எதிர்பார்த்தன.

இருந்தாலும், ஒருமித்த முடிவை எடுக்க முடியாததால், உணவு பாதுகாப்பு நோக்கத்துக்காக பொது சேமிப்பு மேற்கொள்தல் அல்லது மற்ற வேளாண்மை விவகாரங்களில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

பாலியில் நடைபெற்ற அமைச்சக கூட்ட முடிவுகளுடன், நவம்பர் 2014-ல் பொது கவுன்சில் மேற்கொண்ட முடிவுகளை, டிசம்பர் 2015-ல் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 10-வது அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கம் மறுஉறுதி செய்தது. இது இந்தியாவை பாதுகாத்தது. இதன்படி, உணவுப் பாதுகாப்பு விவகாரங்களுக்காக பொது சேமிப்பை மேற்கொள்வதில், நிரந்தரத் தீர்வு ஏற்படுத்தப்பட்டு, உலக வர்த்தக அமைப்பு ஏற்றுக் கொள்ளும் வரை, பின்பற்றுவதற்காக இடைக்கால வழிமுறை ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம், குறைந்தபட்ச ஆதார விலையில், உணவு தானியங்களை கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டது.

2019-ம் ஆண்டில் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்பின் 12-வது அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கில் முடிவை எட்டும் நோக்கில், மீன்வள மானிய ஒழுங்குமுறைகளில் செயல் திட்டம் உள்ளிட்ட முடிவுகள், 11-வது அமைச்சக மட்டத்திலான கருத்தரங்கில் எடுக்கப்பட்டன. மேலும், மின்னணு வர்த்தகத்தில், தற்போது பின்பற்றப்படும் செயல் திட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை என்ற இந்தியாவின் ஆலோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. முந்தைய அமைச்சக கருத்தரங்கில் செய்ததைப் போல, மின்னணு பகிர்மானத்துக்கு சுங்க வரி விதிப்பதற்கான தடையை இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவுசெய்யப்பட்டது. வர்த்தக விவகாரங்கள் தொடர்பான அறிவுசார் சொத்துரிமையை மீறாத நிறுவனங்களுக்கு மற்றொரு அவகாசம் அளிக்கும் முடிவை தொடர முடிவுசெய்யப்பட்டது. இது மருந்துப் பொருட்கள் துறையில் காப்புரிமையை தொடர்ந்து நீட்டித்துக் கொள்வதைத் தடுக்கிறது. இதன்மூலம், பொதுவான மருந்துகள், ஏற்றுக் கொள்ளக் கூடிய விலையில் கிடைப்பது உறுதிசெய்யப்படுகிறது.
புதிய விவகாரங்களான முதலீட்டு வசதி, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், பாலினம் மற்றும் வர்த்தகம் போன்றவற்றில் உறுதியான நிலைப்பாடு அல்லது ஒருமித்த கருத்து ஏற்படாததால், இதில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

உறுப்பினர்களுக்கு இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் இருந்தன. உலக வர்த்தக மையத்துக்கு வழிகாட்டும் முக்கிய கொள்கைகள் வலியுறுத்தல்களுக்கு சில உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதனால், ஏற்றுக் கொள்ளப்பட்ட அமைச்சக தீர்மானத்தை அமைச்சர்களால் உருவாக்க முடியவில்லை. சர்வதேச ஆளுமை, தோகா மேம்பாட்டு செயல் திட்டம், வளரும் நாடுகள் மீது சிறப்பு மற்றும் வேறுபட்ட கவனம் செலுத்துதல் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள், இடம்பெறாமலும், முழுமையடையாமலும் இருந்ததால், வரைவு அமைச்சக தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்கவில்லை.

இருந்தாலும், பல நாடுகளுக்கு இடையே வர்த்தக முறை மற்றும் உலக வர்த்தக அமைப்பில் பல்வேறு துறைகளுக்கான பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்லும் வாக்குறுதி ஆகியவற்றுக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. அமைச்சக தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டாலும், ஏற்கனவே உள்ள முடிவுகள், உணவுப் பாதுகாப்பு நோக்கத்துக்காக பொது சேமிப்பில் நிரந்தரத் தீர்வு, விவசாய பாதுகாப்புக்கான சிறப்பு வழிமுறை, விவசாய மானியம் மற்றும் பிற விவகாரங்களில் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது, உறுப்பினர்கள் தொடர்ந்து பணியாற்றுவது ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

*****