பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்தியா பிலிப்பைன்ஸ் இடையே வேளாண்மை மற்றும் அதுசார்ந்த துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கு இடையே இருதரப்பு வேளாண்துறைகளில் ஒத்துழைப்புக்கு வகை செய்யும். அத்துடன் இருநாடுகளுக்கும் பரஸ்பரம் பலன் அளிக்கும்.

இரு நாடுகளுக்கு இடையே சிறந்த வேளாண்துறைசார்ந்த நடைமுறைகளை புரிந்துகொண்டு மேம்படுத்தவும், சிறந்த உற்பத்தி மற்றும் சந்தை அணுகுமுறைக்கும் வழியேற்படுத்தும்.

அரிசி உற்பத்தி, பதப்படுத்துதல், பல்வேறு பயிர்கள் சாகுபடி முறைகள், உலர் நில சாகுபடி, இயற்கைசார்ந்த மாசற்ற பயோ ஆர்கானிக் விவசாயம், நில மற்றும் நீர் சேமிப்பு மேலாண்மை நில வளம், பட்டுப்புழு வளர்ப்பு, வேளாண் காடுகள், கால்நடைகள் மேம்பாட்டுக்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒத்துழைப்பு வழங்கும்.
இருநாடுகளை சேர்ந்த சம எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு செயல்குழுவை அமைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்த கூட்டுக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியா, பிலிப்பைன்ஸ் நாடுகளில் மாறி மாறி கூடி விவாதிக்கும்.

*****