பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா-இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

எரிசக்தி துறையில் இந்தியா-இஸ்ரேல் இடையேயான நல்லுறவை மேம்படுத்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பின் மூலம், ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டில் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படும். மேலும், தொழில்நுட்ப பரிமாற்றம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, கூட்டு ஆய்வுகளை மேற்கொள்தல், மனிதவளத்தில் திறனை ஊக்குவித்தல், புதிதாக தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு வழிவகை செய்யும்.

***