பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

செங்கோட்டையில் உள்ள மாதவ் தாஸ் பூங்காவில் நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களில் பங்கேற்றார் பிரதமர்; நாட்டுக்கு பங்களிப்பை அளிக்க உறுதியேற்குமாறு மக்களை ஊக்குவித்தார்

தில்லியில் செங்கோட்டை அருகே உள்ள மாதவ் தாஸ் பூங்காவில் இன்று நடைபெற்ற தசரா கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் 2022-ம் ஆண்டுக்கான இந்தியாவுக்கு சாதகமான பங்களிப்பை அளிக்க உறுதியேற்குமாறு ஒவ்வொருவரையும் ஊக்குவித்தார்.

அப்போது பிரதமர் கூறும்போது, “இந்திய திருவிழாக்கள், வெறும் திருவிழா நிகழ்ச்சிகளாக மட்டும் இருப்பதில்லை. சமூகத்துக்கு கற்பிக்கும் ஊடகமாக திகழ்கின்றன. சமூகத்தின் மதிப்புகள் குறித்து நாம் அறிந்துகொள்ளச் செய்பவை திருவிழாக்கள். ஒரே சமூகமாக நாம் ஒன்றாக வாழ வேண்டும் என்பதை அவை நமக்கு போதிக்கின்றன,” என்றார்.

திருவிழாக்கள், நமது ஒருங்கிணைந்த பலம், சமூக கலாச்சார மதிப்புகள் மற்றும் வளமான கலாச்சார பாரம்பரியம் ஆகியவற்றின் வெளிப்பாடு என்று பிரதமர் தெரிவித்தார். அதோடு, சாகுபடி, ஆறுகள், மலைகள், இயற்கை போன்றவற்றுடன் அவை தொடர்புகொண்டவை என்றும் பிரதமர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது, ராவணன், கும்பகர்ணன், மேகநாதன் ஆகியோரின் உருவபொம்மைகளை எரிக்கும் காட்சிகளையும் பிரதமர் பார்வையிட்டார்.