பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தனது பயணத்தின் 2வது நாளில் முசோரியில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (LBSNAA) 92வது அடிப்படைப் படிப்பில் பயிற்சி பெற்றுவரும் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பிரதமர் உரை

தனது பயணத்தின் 2வது நாளில்  முசோரியில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (LBSNAA) 92வது அடிப்படைப் படிப்பில் பயிற்சி பெற்றுவரும் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பிரதமர் உரை

தனது பயணத்தின் 2வது நாளில்  முசோரியில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (LBSNAA) 92வது அடிப்படைப் படிப்பில் பயிற்சி பெற்றுவரும் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பிரதமர் உரை

தனது பயணத்தின் 2வது நாளில்  முசோரியில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (LBSNAA) 92வது அடிப்படைப் படிப்பில் பயிற்சி பெற்றுவரும் பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பிரதமர் உரை

தனது பயணத்தின் இரண்டாவது நாளான இன்று முசோரியில் லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் (LBSNAA) 92வது அடிப்படைப் படிப்பில் பயிற்சி பெற்றுவரும் 360 பயிற்சி அதிகாரிகள் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். பயிற்சி அதிகாரிகளில் 17 சிவில் சர்வீஸ்கள் மற்றும் ராயல் பூட்டான் சிவில் சர்வீஸ் சேர்ந்த 3 சர்வீஸ்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உரைக்கு முன்னதாக, “நான் ஏன் சிவில் சர்வீஸில் சேர்ந்தேன்” என்ற தலைப்பில் பயிற்சி அதிகாரிகள் எழுதிய கட்டுரைகள் மற்றும் வீட்டுவசதி, கல்வி, ஒருங்கிணைந்த போக்குவரத்து முறைமைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு, திடக்கழிவு மேலாண்மை, தொழில்திறன் மேம்பாடு, டிஜிட்டல் பரிவர்த்தனைகள், ஒன்றுபட்ட பாரதம் ஒப்பற்ற பாரதம் ( ஏக் பாரத் – ஷ்ரேஷ்தா பாரத்) மற்றும் புதிய இந்தியா -2022 என்ற அடிப்படைப் பொருள்கள் குறித்தும் செயல்விளக்கங்கள் நடைபெற்றன.

தூய்மை இந்தியா திட்டத்துக்கு தங்களின் சிந்தனைகளையும் பயிற்சி அதிகாரிகள் முன்வைத்தனர்.

பயிற்சி அதிகாரிகள் (OT-கள்) மத்தியில் உரையாற்றிய பிரதமர்,  அவர்களுடைய செயல்விளக்கங்களுக்காக பாராட்டு தெரிவித்து உரையைத் தொடங்கினார். இந்திய அரசின் மூத்த அதிகாரிகள் இந்தக் காட்சியமைப்புகளை ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்கள் கண்டறிந்த அம்சங்கள் மற்றும் கருத்துகளைப் பயிற்சி அதிகாரிகளுடன் அடிப்படைப் பயிற்சி நிறைவு பெறுவதற்கு முன்னதாகப் பகிர்ந்து கொள்ள  வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பயிற்சி முடிந்தவுடன் தங்களுடைய வாழ்க்கைக்கு எப்படி ஆயத்தப்படுத்திக் கொள்வது என பயிற்சி அதிகாரிகளுக்கு யோசனைகள் கூறிய பிரதமர், தங்களைச் சுற்றியுள்ள மக்கள் குறித்து எப்போதும் விழிப்புடனும், கவனிப்புடனும் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். புத்தகங்களில் படித்த விஷயங்கள்,  தவறான பாதையில் செல்லாமல் நிச்சயமாக அவர்களைத் தடுக்கும் என்று கூறிய அவர், தங்கள் அணிகளுடனும் மக்களுடனும் ஏற்படுத்திக் கொள்ளும் இணைப்பும் நல்லுறவும்தான் அவர்களை வெற்றியாளர்களாக ஆக்க உதவும் என்றும் தெரிவித்தார்.

கொள்கை முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு ஜன-பாகிதாரி அல்லது மக்கள் பங்களிப்பின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

சுதந்திரத்துக்கு முன்பு பிரிட்டிஷ் ஆட்சியைக் காப்பாற்றுவதை சிவில் சர்வீஸ்கள் நோக்கமாகக் கொண்டிருந்தன என்று பிரதமர் குறிப்பிட்டார். இப்போது மக்களின் வளமையும், நலனும்தான்  சிவில் சர்வீஸ்களின் நோக்கமாக உள்ளன என்றார் அவர். இந்த நோக்கங்களை சிவில் சர்வீஸ் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டால், அரசு நிர்வாகத்துக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி நீங்கிவிடும் என்று அவர் கூறினார்.

எண்ணக் குவியல்கள் மற்றும் குழு உணர்வு இல்லாமல் போன்றவை, முசோரியில் அளிக்கப்படும் ஆரம்பகால பயிற்சியில் சிறப்பாக சமாளிக்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். அடிப்படைப் பயிற்சியின்போது பயிற்சி அதிகாரிகள் மேற்கொண்ட மலையேற்றப் பயணம் பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்தப் பயணத்தின் போது கற்றுக் கொண்ட குழு உணர்வு மற்றும் தலைமைப் பண்பு போன்ற விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களுடைய பணிக் காலம் முழுவதிலும் அவற்றைப் பயன்படுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஜனநாயகத்தில் ஒரு மாற்றத்துக்கான உத்வேகத்தை சமூக இயக்கங்கள் அளிக்கும் என்று கூறிய பிரதமர், அதற்காக சிவில் சர்வீஸ்கள் ஒரு உந்துதலாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பயிற்சி அதிகாரிகள் நேற்று கலாச்சார நிகழ்ச்சியில் நிகழ்த்திய “வைஷ்ணவ் ஜன்” பக்திப் பாடல் பற்றிக் குறிப்பிட்ட அவர், அந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளை பயிற்சி அதிகாரிகள் சிந்தித்து, “வைஷ்ணவ ஜன்” என்ற வார்த்தைக்குப் பதிலாக “சிவில் பணியாளர்” என பொருத்திப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.

வெளிக்காட்டிக் கொள்ளா சேவைதான் சிவில் சேவகரின் மிகப் பெரிய பலம் என்று பிரதமர் கூறினார். அசோகர் ஸ்தூபியில், பார்வையில் படாமல் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் தன்னுடைய இருப்பை உணரச் செய்து கொண்டிருக்கும் நான்காவது சிங்கத்தைப் போன்றது சிவில் சர்வீஸ்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

பயணம் என்பது முக்கியமான இந்திய பாரம்பரியம் என்று கூறிய அவர், பயணங்கள் செய்து மக்களுடன் கலந்துரையாடுவது மிகப் பெரிய கற்றல் அனுபவம் என்று கூறினார். தங்களது பணியின்போது களப்பகுதிகளுக்கு பயிற்சி அதிகாரிகள் பயணம் செல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“வாழ்க்கை முறை உணர்வு” பயிற்சி அதிகாரிகளை வெற்றிகரமாக  வந்திருக்கும்  LBSNAA-வுக்கு பயிற்சி அதிகாரிகள், இந்திய மக்களுக்கான சேவைக்காக அதை “லட்சிய உணர்வு” என மாற்றிக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். எதிர்காலத்தில் களப்பணியாற்றும் போது, “வாழ்க்கைக்கான அவசியம்” இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக காலையில் இமயமலை பின்னணியில், அகாடமியின் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி அதிகாரிகளின் யோகாசனப் பயிற்சியில் பிரதமர் பங்கேற்றார்.

புதிய விடுதிக் கட்டடம் மற்றும் 200 மீட்டர் பன்முகப் பயன்பாட்டு செயற்கை அதலெடிக் ஓடுதளம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டுதலைக் குறிக்கும் வகையில் கல்வெட்டுகளைப் பிரதமர் திறந்து வைத்தார்.

அகாடமியில் உள்ள குழந்தைகள் மையத்தை பிரதமர் பார்வையிட்டு, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். அகாடமியில் உள்ள உடற்பயிற்சி அரங்கம் மற்றும் இதர வசதிகளையும் அவர் பார்வையிட்டார்.

 

***