பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தூய்மை இந்தியா தினத்தை ஒட்டி பிரதமர் பேச்சு:தூய்மை இந்தியா இயக்கத்தின் 3ஆம் ஆண்டு மற்றும் தூய்மை சேவை இயக்கம் நிறைவு

தூய்மை இந்தியா தினம், தூய்மை இந்தியா இயக்கத்தின் மூன்றாம் ஆண்டு நிகழ்வு தூய்மை சேவை இரு வார இயக்கத்தின் நிறைவு ஆகியவற்றை ஒட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பேசினார்.

அவர் பேசுகையில், “அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள் ஆகும். இந்நாள் தூய்மையான இந்தியா என்ற குறிக்கோளை எட்டுவதற்கு எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறோம் என்பதை பிரதிபலிக்கும் நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தூய்மை இந்தியா இயக்கம் பல்வேறு விமர்சனங்களுக்கு இடையில் எப்படி தொடங்கப்பட்டது என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார். மகாத்மா காந்தி காட்டிய பாதை தவறாக அமையாது என்பதை உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும், யாரும் இத்தகைய கொள்கைகளிலிருந்து ஒதுங்கிவிடக் கூடாது என்றார் அவர்.

“இன்று, பொதுமக்கள் எல்லோரும் தூய்மையை அடையவேண்டும் என்ற ஆவலை ஒரே குரலில் வெளிப்படுத்தி வருகிறார்கள். தூய்மை இயக்கத்தின் சேவையை தலைவர்களாலும், அரசுகளாலும் நிறைவேற்றி விட முடியாது. ஆனால், சமுதாயத்தின் முயற்சிகளால் மட்டுமே எட்ட இயலும். இந்த இயக்கத்தில் பொதுமக்களின் பங்கு பெரிதும் போற்றத் தக்கது. இன்று தூய்மை இயக்கப் பிரசாரம் ஒரு சமூக இயக்கமாக மாறிவிட்டது. இதுவரை சாதித்தது எல்லாமே தூய்மையான பொதுமக்களின் சாதனைதான்” என்று பிரதமர் கூறினார்.

சுயராஜ்யத்தை நாம் சத்தியாகிரகத்தின் மூலம் அடைந்தோம் என்றால், சிறந்த பாரதத்தை தூய்மைத் தொண்டின் மூலம் அடைவோம் என்றார் பிரதமர்.

தூய்மைப் பணிகள் குறித்த மதிப்பீடுகளைக் குறிப்பிட்ட பிரதமர், அப்பணிகள் நம்பிக்கை ஊட்டுகின்றன என்றும், போட்டித்தன்மைக்குரிய சூழலை உருவாக்கியுள்ளன என்றும் கூறினார். “தூய்மைப் பணி இயக்கத்திற்கு புரட்சிகரமான சிந்தனைகள் தேவைப்படுகின்றன. தூய்மைப்பணிகளுக்கான போட்டித் தன்மை அத்தகைய தூய்மைக்கான சிந்தனைகளுக்குத் தளம் அமைத்துத் தரும்” என்றும் பிரதமர் கூறினார்.

தூய்மைப் பணி இரு வார இயக்கத்திற்குப் பங்களிப்பு செலுத்திய அனைவரையும் பிரதம மந்திரி வாழ்த்திப் பாராட்டிய பிரதமர் மேலும் ஏராளமாகச் செய்ய வேண்டியிருக்கிறது என்றும் கூறினார்.

தூய்மை இயக்கம் தொடர்பாக நடைபெற்ற கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, திரைப்படப் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பிரதமர் பரிசுகளை வழங்கினார். அத்துடன் டிஜிட்டல் காட்சிகள் வைக்கப்பட்ட கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.

*****