பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் போது நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பிரதமர் அளித்த அறிக்கை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கும் போது நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பிரதமர் அளித்த அறிக்கை

புதுதில்லி டிசம்பர் 15, 2017

 காலை வணக்கம் நண்பர்களே,

வழக்கமாக தீபாவளியுடன் குளிர்கால பருவம் தொடங்கும். இருந்தாலும், புவி வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றத்தின் விளைவு காரணமாக இப்போதெல்லாம் யாரும் குளிராக உணர்வதில்லை.

இருந்தபோதிலும், நமது குளிர்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. 2017-ல் தொடங்கி 2018 வரையில் செல்லும் இந்த குளிர்கால கூட்டத் தொடரில், நீண்டகால தொலைநோக்கு சிந்தனையில் விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய, அரசுக்கு முக்கியமான ஏராளமான பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று நான் நம்புகிறேன்.

நல்ல விவாதம் இடம் பெற வேண்டும், ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும், புதுமையான ஆலோசனைகளுடன் விவாதம் நடைபெற வேண்டும்… அப்போதுதான் நாடாளுமன்றத்தின் நேரம் நாட்டின் நன்மைக்காக முறையாகப் பயன்படுத்தப்படும்.

எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. நேற்றுகூட `அனைத்துக் கட்சிக் கூட்டம்’ நடைபெற்றது. நாட்டை முன்னெடுத்துச் செல்லக் கூடிய வகையில் நாடாளுமன்ற கூட்டத் தொடரை பயன்படுத்த வேண்டும் என்பதில் அந்தக் கூட்டத்தில் பொதுவான கருத்து இருந்தது.

நாடாளுமன்றம் ஆக்கபூர்வமாக செயல்பட்டால் நாடு பயன் பெறும், ஜனநாயகம் வலுப்பெறும், சாமானி மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளை நிறைவேற்றுவோம் என்ற புதிய நம்பிக்கை உருவாக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன். உங்களுக்கு மிக்க நன்றி.

***