பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெங்களூருவில் நடைபெற்ற தஷமா சவுந்தர்ய லகரி பாராயணோத்சவ மகாசமர்ப்பணே நிகழ்ச்சியில் பங்கேற்றார் பிரதமர்

 

பெங்களூருவில் இன்று நடைபெற்ற தஷமா சவுந்தர்ய லகரி பாராயணோத்சவ மகாசமர்ப்பணே நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார்.

சவுந்தர்ய லகரி என்பது ஆதி சங்கராச்சாரியார் உருவாக்கிய ஸ்லோகங்களின் தொகுப்பு ஆகும். இந்த நிகழ்ச்சியில், சவுந்தர்ய லகரியை பொதுமக்கள் கூட்டாக உச்சரித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு.நரேந்திர மோடி, இந்த கூட்டு உச்சரிப்பு நிகழ்ச்சியின் சூழல், தனக்கு அதீத சக்தியை வழங்கியதைப் போன்று உணர்வதாக தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன்பு கேதார்நாத்துக்கு பயணம் மேற்கொண்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார். தனது குறுகியகால வாழ்க்கையில், கேதார்நாத்தின் மலைப் பகுதியிலும், இந்தியா முழுவதும் உள்ள மற்ற பகுதிகளிலும் ஆதி சங்கரர் செய்த பணிகளைப் பார்த்து, தான் முழு ஆச்சரியம் அடைந்ததாக பிரதமர் கூறினார். வேதங்கள் மற்றும் உபநிடதங்கள் மூலம், இந்தியாவை ஆதி சங்கரர் ஒருங்கிணைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

ஆதி சங்கரர் தொகுத்துள்ள சவுந்தர்ய லகரியுடன் சாதாரண மனிதர்கள், தங்களை இணைத்துக் கொள்ள முடியும் என்று பிரதமர் தெரிவித்தார். சமூகத்திலிருந்து கொடுமைகளை ஆதி சங்கராச்சாரியார் அகற்றியதாகவும், எதிர்கால சந்ததியினருக்கு கொடுமைகள் வராமல் தடுத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

பல்வேறு கொள்கைகள் மற்றும் சிந்தனைகளிலிருந்து சிறந்த நடைமுறைகளை ஆதி சங்கரர் மனதில் எடுத்துக் கொண்டதாக பிரதமர் தெரிவித்தார். ஆதி சங்கராச்சாரியாரின் தவம், இந்திய கலாச்சாரத்தின் தற்போதைய வடிவிலும் நீடித்து இருப்பதாக அவர் தெரிவித்தார். இந்தக் கலாசாரம், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் ஒன்றாக முன்னோக்கிச் செல்வதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்தக் கலாசாரமே புதிய இந்தியாவின் அடித்தளம் – அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்தை பின்பற்றுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த வழியில், உலகில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் தீர்வை அளிப்பதாகவும் பிரதமர் கூறினார். இந்தியாவில், இயற்கையை அழிப்பதைத் தடுக்க எப்போதுமே வலியுறுத்தப்பட்டு வருவதாக திரு. நரேந்திர மோடி தெரிவித்தார். 

ஏற்கனவே 350 ரூபாய்க்கும் மேலாக விற்கப்பட்ட எல்.இ.டி. பல்புகள், உஜாலா திட்டத்தின் கீழ், தற்போது 40 முதல் 45 ரூபாயில் கிடைப்பதாக பிரதமர் தெரிவித்தார். இதுவரை 27 கோடிக்கும் அதிகமான எல்.இ.டி. பல்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மின்சாரக் கட்டணத்திலும் சேமிக்க முடிகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

உஜ்வாலா திட்டத்தின் மூலம், 3 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். இது கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தூய்மையான சுற்றுச்சூழலுக்கும் பங்களிப்பை செய்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார்.

கல்வியின்மை, அறியாமை, ஊட்டச்சத்துக் குறைபாடு, கறுப்புப் பணம் மற்றும் ஊழல் போன்ற கொடுமைகளை இந்தியாவிலிருந்து அகற்ற முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நேரம் இது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.

***