பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஹரித்வாரில் உள்ள உமியா தாம் அசிரமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே காணொளி காட்சி மூலம் பிரதமர் உரை

பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள், இன்று ஹரித்வாரில் உள்ள உமியா தாம் அசிரமம் தொடக்க விழா நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே காணொளி காட்சி மூலம் பிரதமர் உரை நிகழ்த்தினார்.

 

இந்தியாவில் உள்ள ஆன்மிக நிறுவனங்கள் சமூக சீர்திருத்தம் பரப்பும் மையங்களாக இருப்பதாக பிரதமர் கூறினார். இந்தியாவின் பண்டைய கருத்தாகவும், ஆன்மிக பாரம்பரியமாகவும் சுற்றுலா விளங்குவதாக பிரதமர் வர்ணித்தார். இன்று துவக்கப்பட்டுள்ள ஆசிரமம், ஹரித்வாருக்கு வருகை தரும் புனிதயாத்திரிகர்களுக்கு நன்மையளிக்கும் என்றார். யாத்திரை என்ற உத்தி நமது கலாச்சாரத்தில் உள்ளடங்கியதாக இருக்கிறது என்றார் அவர். யாத்திரையின் மூலம், நாட்டின் பல பகுதிகள் குறித்து நாம் அறிய இயலும், இல்லையெனில் நாம் அதனை வேறுவிதமாக காண்போம் என்றார்.

 

உமியா அன்னையின் பக்தர்களின் பணி பல மக்களின் வாழ்க்கையை தொட்டுள்ளதாக பிரதமாக கூறினார். அவர்கள் பாலின சமத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். அவர், “பெண்குழந்தையை காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்” என்ற செய்தியை மேலும் கொண்டு செல்வதற்காக மேஹ்சனா மாவட்ட பெண்களுக்கு சிறப்பாக நன்றி தெரிவித்தார்.

உமியா அன்னையின் அனைத்து பக்தர்களும், தூய்மை பணியாளர்களாக மாறி, தூய்மையான இந்தியா இயக்கத்திற்கு வலுசேர்க்க வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.