இந்தியா பல்வேறு வளங்களை கொண்டது. தற்போது பருவநிலை கொள்கைகளை கொண்டுவரும் இடமாகவும் உள்ளது. 125 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த தேசம், 80 கோடி இளைஞர்ளை கொண்டு ஆசிர்வதிக்கப்பட்டுள்ளது. உலகப் பொருளாதாரம் மோசமான நிலைக்கு சென்றபோது, இந்தியா நமது பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறது என்று உலகமே ஒற்றைக் குரலில் நம்மை பாராட்டியது.