என்னை பொருத்த வரையில், தொழில்நுட்பம் என்பது, கண்டுபிடிப்பு, கற்றல், படிப்படியான வளர்ச்சி, செயலாக்கத்துக்கு உதவுவதாகும். அது மூன்று ‘எஸ்’ என்ற ஆங்கில சொற்களை உள்ளடக்கியதாகும். அதாவது வேகம் (speed), எளிமை (simplicity), சேவை (service) ஆகியவற்றை அடக்கியதாகும். தொழில்நுட்பம் வேகமானது. தொழில்நுட்பம் எளிமையானது. மக்களுக்கு சேவையாற்ற தொழில்நுட்பம் மிகச்சிறப்பானது. மேலும், அது மிகச்சிறந்த ஒரு ஆசிரியர். தொழில்நுட்பத்தை பற்றி நாம் அதிகம் கற்றல் வேண்டும். அதை தொழில்நுட்பத்தின் வாயிலாகவே கற்க வேண்டும். அதுதான் சிறப்பானது.