ஒரு தேசம் சிறப்பான ஆயுத தொழிற்சாலைகளை கொண்டிருப்பதால் மட்டுமே, அது வலிமையான நாடாகி விட முடியாது. அது வளமான பொருளாதார பலன்களை பெற வேண்டும். முதலீடுகள் மற்றும் உற்பத்திகளை பெருக்குதல், தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல், தொழில்நுட்ப அளவை மேம்படுத்துதல், நாட்டில் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றினால்தான் அது வலிமையான நாடாக முடியும்.