ஓராண்டிற்கு முன்பு, 125 கோடி மக்கள் தொகையைக் கொண்ட நாடு மனித வரலாற்றில் மிகப்பெரும் ஜனநாயகபூர்வமான தேர்தலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்காக வாக்களித்தனர். இந்தியாவின் பிரம்மாண்டமான சமூக, பொருளாதார பன்முகத்தன்மையில் அடங்கியுள்ள சவால்களை நாம் நன்றாக உணர்ந்தேயுள்ளோம். எனினும் நமது நாட்டின் ஒற்றுமையிலிருந்தே நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அதற்கும் மேலாக, 35 வயதிற்குக் கீழ் வயதான 80 கோடி இளைஞர்களைக் கொண்ட இளம் இந்தியாவின் எதிர்பார்ப்புகளிலிருந்தே நாங்கள் உத்வேகம் பெறுகிறோம்.