தெற்காசிய மண்டலத்தில் இந்தியாவும் பெரும்பாலான நாடுகளும் பொருளாதார முன்னேற்றத்துக்கு அமைதி வழியையே கடைப்பிடித்து வருகின்றன. ஆனால், பயங்கரவாதத்தை உருவாக்கி, பிறநாடுகளில் செயல்படுத்துவது இந்தியாவுக்கு அண்டையில் உள்ள ஒரு நாட்டின் போட்டி செயல்பாடாக உள்ளது. இவ்வாறு செய்வது மண்டலத்தில் அமைதிக்கான வாய்ப்பைக் குறைத்து, வன்முறை பயங்கரவாதத்துக்கு இடமளித்து வருகிறது. எல்லோருடைய அமைதி, வளம் ஆகியவற்றுக்கும் ஆபத்து விளைவித்து வருகிறது. உலகுக்கே பயங்கரவாதத்தைப் பரப்பும் நடவடிக்கையை நிறுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. அதைத் தூண்டுவோருக்குத் தடை விதிக்க வேண்டிய காலமும் வந்து விட்டது. – 11ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. மோடி