தொழிலாளர் சந்தையை மேம்படுத்தவும், வேலையற்றோர் பயனடையவுமான மற்றொரு நடவடிக்கை குறித்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசும் பொதுத் துறை நிறுவனங்களும் பணியிடங்களை நிரப்புவதற்கென தேர்வுகளை நடத்தி வருகின்றன. இந்தத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் இதுவரையில் அரசாங்கமே தன்னிடம் வைத்திருந்தது. இனிமேல் தேர்வுமுடிவுகள், வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் இந்த வேலைகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களிடமும் வழங்கப்படும். இதன் மூலம் ஊழியர்கள் கூடுதலாக உள்ள பகுதிகளிலிருந்து இதர பகுதிகளில் பொருத்தமான வேட்பாளர்களை தேர்வு செய்ய உதவியாக அமையும்