நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள வீட்டுவசதி ஒழுங்கமைப்பு சட்டமானது வீட்டுவசதி சந்தையை மாற்றியமைப்பதில் பெரும்பங்கு வகிக்கும் என்பதோடு, வாங்குபவர்களின் நலனை பாதுகாப்பதாகவும், நியாயமான, வலுவான நடைமுறைகளை வளர்ப்பதாகவும் அமைகிறது. நீண்டநாட்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த மசோதாவை நிறைவேற்றியதோடு கூடவே புதிய நடுத்தரவர்க்கம் மற்றும் ஏழைகளுக்கான வீட்டு திட்டங்களில் வாங்குபவர்கள், இத்தகைய திட்டங்களை நிறைவேற்றுபவர்களுக்கும் வரிகளில் ஊக்கத் தொகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன