பள்ளிக் கல்வியை முடித்து வெளியேறுபவர்களின் தரம்தான் இன்றைய அறிவுப் பொருளாதாரத்தின் அடிப்படையாக அமைகிறது. கல்வியால பெற்ற தரத்தையே அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று நாம் இப்போது முடிவு செய்திருக்கிறோம். இதன்படி, சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதியாதாரங்களின் பங்கை தரத்திற்கென அதிகரிக்கவிருக்கிறோம். கல்வியின் பயனை மேம்படுத்துவதற்கான உள்ளூர் அளவிலான முன்முயற்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்காக இந்த கூடுதல் நிதி பயன்படுத்தப்படும்.