மனித வரலாற்றில், ஓராண்டுக்கு முன்பு நடந்த ஒரு மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில், 125 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, மாற்றம் மற்றும் வளர்ச்சிக்காக வாக்களித்தது. எங்கள் முன் உள்ள சவால், இந்தியாவின் மிகப்பெரிய பரந்த சமூக மற்றும் பொருளாதார வேறுபாடுகள் ஆகியவற்றுக்கு இடையிலானது என்பதை நாங்கள் அறிவோம். ஆனால், ஒற்றுமையான எங்கள் தேசத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மேலும், இளம் இந்தியாவின் விருப்பங்கள் மூலம் நாங்கள் உந்துசக்தி பெற்றுள்ளோம். ஏனெனி்ல், இங்கு 35 வயதுக்கு உட்பட்ட 80 கோடி இளைஞர்கள் இருக்கின்றனர்.