வளத்தை பகிர்தல், ஒரு நாட்டின் வெற்றியானது மற்ற நாடுகளுக்கு பலமாக அமைவது ஆகியவற்றை கொண்ட ஆசியாவைதான் இந்தியா எதிர்பார்க்கிறது. ஒவ்வொரு நாட்டினிலும் மற்றும் நாடுகளை தாண்டியும் வளர்ச்சியானது இருக்க வேண்டும். இது தேச அரசாங்கத்தின் கடமையாக மட்டும் இல்லாமல், பிராந்திய அளவிலான பொறுப்பாகவும் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தியாவின் வளர்ச்சி என்பது ஆசியாவின் வெற்றிக் கதையாக இருக்கும். மேலும், இது ஆசியக் கனவை மிகப்பெரிய அளவை நனவாக்கும் வகையில் உதவிகரமாக இருக்கும்.