அண்மையில் நடைபெற்ற தேர்தலில் கிடைத்த வெற்றிக்காகவும், தமது தலைமை மீதான நம்பிக்கையை புதுப்பித்ததற்கும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை மாபெரும் வளர்ச்சி மற்றும் வளத்துக்குக் கொண்டு செல்லும் அவருக்கு எனது வாழ்த்துகள். நட்பு ரீதியான இரு நாடுகளுக்கும் இடையே மிகவும் ஆழமானதாக மற்றும் வரலாற்று பூர்வமாக திகழும் நல்லுறவை புதிய பாதைக்குக் கொண்டு செல்ல இணைந்து பணியாற்ற ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன். ஏமன் மக்களுக்கும், அதன் சட்டப்பூர்வ அரசுக்கும் தொடர் ஆதரவை அளித்து வரும் இந்தியாவின் நடவடிக்கையை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன்.