“மாண்புமிகு பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியின் தலைமையில் நம் நாட்டின் விரிந்த கடலோரப் பகுதிகளின் நலனுக்காக இந்தியக் கடற்படையைப் பாதுகாக்க வேண்டும் என்ற புரிதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்தியக் கடற்படைப் பணிக்கும் தொடர்புள்ளது. எனவே, எல்லாக் காலத்திலும் தங்கு தடையின்றி அதன் மேம்பாடு அடைய வேண்டும். இந்த நீலப் பொருளாதாரத்தைக் (Blue economy) காப்பதற்கான மாண்புமிகு பிரதம மந்திரியின் தொலைநோக்குப் பார்வை காரணமாக கடல் வளம், கடலோரப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. 21ஆம் நூற்றாண்டில் இந்தியா கடல்வள நாடாக மீண்டும் எழுச்சி பெறுகிறது”