அந்தோணி அல்பானீஸ், ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, இந்தியா உயர்மட்ட பாதுகாப்பு கூட்டாளியாக உள்ளது. இந்தியப் பெருங்கடல் இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்துக்கு மையமாக உள்ளது. வரலாற்றில் இதுவரையிலும், நமது இருநாடுகளுக்கிடையே இவ்வளவு ஒத்திசைவான வலுவான பாதுகாப்பு உறவுகள் இருந்ததில்லை. நமது வர்த்தகம் மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்காக இந்தோ-பசிபிக் கடல் வழிகளில், தடையற்ற, வெளிப்படையான அணுகலை நாம் சார்ந்துள்ளோம்.