"எங்களை பல்வேறு வகைகளில் பிரதமர் மோடி ஊக்குவித்துள்ளார். வளர்ச்சி மற்றும் விருந்தோம்பல் தொழில்துறையில் இந்தியாவை தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதே அவரது நோக்கம். நாடு முழுவதும் உள்ள முதன்மை நகரங்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களின் வளர்ச்சிக்கும் பிரதமர் வித்திட்டு வருகிறார். பல்வேறு ஆன்மிகத் தலங்கள், சுற்றுலாத் தலங்கள், தீவுகள் என மக்கள் அதிகம் செல்லாத, பெருமளவு அறிந்திராத இடங்களிலும் தங்கும் விடுதிகளை உருவாக்கினால் மக்களால் அந்த இடங்களையும் நேரில் பார்வையிட்டு கண்டு ரசிக்க முடியும் என்று அவர் கூறுவார். குறிப்பாக இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தினரின் மேம்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் அவரது உத்வேகம் நிறைந்த பங்களிப்பு முக்கியமானது."