அனில் கும்ப்ளே, முன்னாள் கிரிக்கெட் வீரர்
நம்மிடம் இப்போது சிறுத்தைகள் உள்ளன, நீங்கள் சிறுத்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் (பிரதமர் மோடி) கேட்டுக்கொண்டார். நான் கர்நாடகத்தில் வனவிலங்கு வாரியத்தில் இருந்த போது, அப்போதைய குஜராத் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நான் சென்றிருந்தேன். மைசூரு மிருகக்காட்சி சாலைக்கு சிங்கங்களை அவர் வழங்கியதாக கூறினார்கள். அந்த சிங்கங்களில் ஒன்று இன்னும் நன்றாக உள்ளது. மேலும் சில சிங்கங்கள் மிருகக்காட்சி சாலையில் உள்ளன. அவருடனான கலந்துரையாடல் மிகச்சிறப்பாக அமைந்தது. அவருக்கு நன்றி.