வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் மூன்றாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு @narendramodi வாழ்த்துகள். உங்களது தலைமையின் கீழ், மாலத்தீவுகள் மற்றும் பிராந்தியத்துடனான உறவை இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தியுள்ளது. இந்த வெற்றிகளை மேலும் மேலும் ஒத்துழைப்பை நோக்கி நீங்கள் கட்டியெழுப்புவீர்கள் என்று நான் நம்புகிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நடைமுறை முடிவடையும் தருவாயில், ஜனநாயகத்திற்கான உறுதிப்பாடு மற்றும் மீள்திறனுக்காக இந்திய மக்களையும், நிறுவனங்களையும் நான் பாராட்டுகிறேன்.