பெரும்பாலான தொழில்துறை தலைவர்கள் இந்தியாவில் நடக்கும் முன்னேற்றத்தைக் காண்கின்றனர். அவர்கள் தங்கள் உற்பத்தி ஆலைகளை இந்தியாவில் அமைக்க விரும்புகின்றனர். அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஒவ்வொருவரும் கவனித்துள்ளனர். நமது பிரதமர் எப்போதும் அடித்தட்டு மக்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளார். அவர்களின் வாழ்க்கை மேம்பட்டு வருகிறது. அது நிலையான வளர்ச்சியை அளிக்கிறது.