அர்னாப் கோஸ்வாமி
“(தொலைக்காட்சியில்) அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த “பிக் ஃபைட்” என்ற நிகழ்ச்சியை ஒரு முறை நடத்தியபோது எனது பணியில் திருப்புமுனை ஏற்பட்டது.  காஷ்மீர் தொடர்பான விவாதத்தில் திரு. மோடியுடன் தொடர்புகொண்டு அதில் பங்கேற்பீர்களா என்று கேட்டேன். அந்த நிகழ்ச்சியின் விவாதப் பேச்சாளர்களில் ஹுரியத் அமைப்பைச் சேர்ந்த மிர்வைஸ் உமர் ஃபரூக், சிறந்த ராஜதந்திரியான ஜி. பார்த்தசாரதி, அடல் பிஹாரி வாஜ்பாய் அரசின் பிரதிநிதியாக திரு. நரேந்திர மோடி ஆகியோர் இடம்பெற்றனர். ஹுரியத் இயக்கத்துக்குச் சவால் விடும் வகையில் திரு. மோடி எழுப்பிய வாதங்களில் இருந்த தெளிவு அற்புதமானது. அந்நிகழ்ச்சிக்கு நான் மிகுந்த வரவேற்பைப் பெற்றேன். அண்மையில் மும்பையிலிருந்து தில்லிக்கு விமானத்தில் பயணம் செய்தபோது, நானும் திரு. ஜி. பார்த்தசாரதியும் அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தோம். அப்போது, நாட்டுப் பாதுகாப்பில் அக்கறை காட்டும் வகையில் திரு. மோடியின் பார்வையில் இருந்த ஆழத்தையும் உறுதிப்பாட்டையும் பற்றிப் பேசினோம்”