ஆனந்த் மஹிந்திரா, தலைவர், மஹிந்திரா குழுமம்
சியோல் அமைதி விருது 2018-ஐ பெற்றமைக்காக தங்களை வாழ்த்த  நான் விரும்புகிறேன். இந்த விருது இந்திய தொழில் முனைவோருக்கு சர்வதேச அளவில் உள்ள நன்மதிப்பை அதிகரிப்பதுடன், இந்தியத் தொழில் துறையினருக்கும் பயனளிப்பதாக இருக்கும். எங்களது பேரன்பிற்குரிய பிரதமர், தூய்மை இந்தியா இயக்கம் அல்லது ஊழல் ஒழிப்பு மற்றும் சமூகப் பொறுப்புணர்வுகளை எதிர்கொள்வதில், முக்கியத்துவம் வாய்ந்த கொள்கைகளை வகுப்பதிலும்,  பெரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பணியிலும் எப்போதும் ஈடுபட்டுள்ளார் என்பதை நாங்கள் அறிவோம்.