“வர்த்தகம் செய்வதற்கான சூழலை மேம்படுத்துவது; வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்துவதென்பது பிரதமரிடமிருந்தே வருவதையும், (அதன் விளைவாக) அரசு முழுவதிலும் அது தீவிரமாகச் செயல்படுவதையும் கண்டு நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். பொருளாதார ரீதியாக இந்தியா வளம் பெறவேண்டுமெனில், இந்தியாவில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதில் தொடர்ந்து கவனம் செலுத்துவதுதான் சரியான வழி என்றே நான் கருதுகிறேன்.”