“குறிப்பாக 2018-ம் ஆண்டில் மின்சார வசதியைப் பெறுவது குறித்த மிகப்பெரும் வெற்றிக் கதைகளில் ஒன்றாக இருப்பது என்பது இந்தியா தனது கிராமங்கள் அனைத்தையும் மின்சார மயமாக்கியதே ஆகும்… மின்சாரமயமாக்கல் வரலாற்றில் மிகச்சிறந்த சாதனைகளில் ஒன்றாக இது விளங்குகிறது. 2000-ம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் சுமார் 50 கோடி மக்கள் மின்சார வசதியைப் பெற்றுள்ளனர். கடந்த ஐந்தாண்டுகளில் அரசியல் ரீதியான முயற்சிகளின் விளைவாக இந்த முன்னேற்றம் விரைவு பெற்றிருக்கிறது.”