என். ஆர். நாராயண மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர்.
“மத்திய அரசு அளவில் ஊழலைக் குறைப்பதற்கு பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவையும் கடுமையாக உழைத்திருக்கிறது. மத்திய அரசு அளவில் ஊழல் குறித்த புகாரை நான் மிகவும் அரிதாகவே கேட்க நேர்ந்தது… பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட வலுவானதொரு அரசுக்கு பிரதமர் தலைமை தாங்குவதாகவே நான் பொதுவாக நினைக்கிறேன்… இந்தியாவை மேம்படுத்துவதில் ஆர்வமுள்ள மோடியைப் போன்ற திறனுள்ள ஒரு தேசியத் தலைவர் இருக்கிறார் என்பதற்காக நாம் மிகவும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளைப் பார்க்கும்போது, நாட்டின் மீது கவனம் செலுத்தக் கூடிய, ஒழுங்குமுறை, தூய்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின்மீது கவனம் செலுத்தக் கூடிய ஒரு தலைவரைப் பெற்றிருப்பது மிகவும் நல்லதாகும். இத்தகையதொரு அரசு தொடர்வது மிகவும் நல்லதே.”