ஐயன் பிரெம்மர், தலைவர், யுரேசியா குழுமம்
தூய்மையானவர் மற்றும் வல்லமை மிக்கவர் என்பதால் பெருமளவு பிரபலமாகியுள்ள பிரதமரை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். உண்மையில் அவர் லஞ்சத்துக்கு ஆட்படுத்த முடியாதவர். சுமார் ஒரு பில்லியன் பேருக்கும் அதிகமான மக்களைக் கொண்ட ஒரு நாட்டில், தனக்காக பணம் எதையும் எடுத்துக் கொள்ளாததுடன், தன்னைச் சுற்றியுள்ளவர்களும் பணம் பெறாதிருப்பதை உறுதி செய்யக் கூடிய ஒரு தலைவரை கடைசியில் பெற்றிருப்பது உண்மையான விஷயம். இந்தியாவின் சொத்து மற்றும் ஆதார வளங்களை எடுத்து, உண்மையிலேயே தேவை உள்ள மக்களுக்கு அளிப்பதற்கு முயற்சி செய்வது மற்றும் அதிகாரவர்க்கத்தின் மோசமான செயல்பாடுகளை ஒழிப்பது ஆகியவைதான் அவருடைய கொள்கைகளில் முதன்மையானவையாக உள்ளன. கட்டமைப்புகளை உருவாக்குதல், தேசிய அளவில் சரக்குகள் மற்றும் சேவை வரியை உருவாக்குதல், பெரிய அளவில் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய வளர்ச்சிப் பாதைக்கான சீர்திருத்தங்களைத் தொடங்குதல் போன்ற செயல்களுக்கு அவரை அனுமதிக்கக் கூடிய அரசியல் தலைமை கிடைக்க இது காரணமாக உள்ளது.