“உங்களது வலுவான கனவு, தெளிவான சிந்தனை மற்றும் செயல்பாடு ஆகியவற்றுடன் நோக்கத்தின் அடிப்படையில் நீங்கள் செயல்படுத்தும் ஆளுமை, இந்தியா எதிர்கொண்டுவரும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள தொலைநோக்கு பார்வை மற்றும் உள்ளுணர்வு அடிப்படையில் நீங்கள் மேற்கொண்டுவரும் பணிகள் ஆகியவை என்னை ஊக்குவித்துள்ளது. உங்களது கட்டுப்பாடு இல்லாத சக்தி, சலிப்பில்லாத உணர்வு, தனிநபர் நேர்மை, வாக்குறுதி, எப்போதுமே முன்னணியில் இருந்து தலைமைவகிக்கும் திறன் ஆகியவை சிறப்பான ஊக்குவிப்பாக இருந்து வருகிறது. பலபரிணாமங்களின் அடிப்படையில் நீங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள், இந்திய தொழில்முனைவோரை ஊக்குவிக்கும். இது, 100 கோடிக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், இந்தியப் பொருளாதாரத்தை மாற்றியமைக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும்.