கன்வல் சிபல்
“திரு. நரேந்திர மோடி அவர்கள் அவருக்கு முன் இருந்த பெரும்பாலான இந்தியப் பிரதம மந்திரிகளைப் போல் அல்லாமல் இந்தியா, அதன் மக்களின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து, உண்மையாகவே அடித்தள மக்களின் நிலையைப் புரிந்துகொள்ளும் மனிதராக இருக்கிறார். அவரது தனிப்பட்ட பின்னணி, தொடக்க காலத்தில் இந்தியா முழுவதும் அவர் மேற்கொண்ட பயணங்கள், பரம்பரை ஏதுமில்லாமல், திறமையால் உயர்ந்த அரசியல் எழுச்சி, இந்தியாவின் துடிப்பான மாநிலங்களில் ஒன்றின் தலைமையின் மூலம் கிடைத்த அனுபவம் ஆகியவை மிகப்பெரிய, பல சிக்கல்களைக் கொண்ட நாட்டின் தலைமையை ஏற்று நடத்துவதற்கான அறிவாற்றல், அரசியல், நிர்வாகத் திறமை ஆகியவற்றை அளித்திருக்கின்றன. அவர் தொடங்கிய தேசிய அளவிலான பிரசாரங்கள் அவரது இணையற்ற நாவன்மை ஆகியவை அவரது ஆழமான அனுபவங்களின் வெளிப்பாடுகள்”