பொறியியல் மற்றும் கணினி மேம்பாட்டில் இந்திய கண்டுபிடிப்பாளர்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர். அவர்கள் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பியுள்ளனர். தானியங்கி வாகனங்கள், ரோபாட்டிக்ஸ், சைபர் பாதுகாப்பு, பருவநிலை தரவு, டிஜிட்டல் நிதி ஆகிய துறைகளில் உலகளாவிய தலைமை பண்புடன் விளங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களை அவர்கள் தொடங்கியுள்ளதுடன், அவற்றை வழிநடத்தியும் வருகின்றனர். - இவை அனைத்தும் மனித நிலையை மேம்படுத்தவும் மக்களை மேம்படுத்தவும் உதவும். இந்தியாவின் உலகளாவிய ஈடுபாடு இந்திய மக்களுக்கு மட்டுமல்லாமல், அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கும் நன்மை பயக்கும்.