கமலா ஹாரிஸ், அமெரிக்க துணை அதிபர்
இந்தியா உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை, தத்துவம் மற்றும் இறையியல், சட்டமறுப்பு இயக்கம்  சக்தி அல்லது ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் ஊக்கப்படுத்தியுள்ளது. உண்மையில், நான் துணை அதிபராக உலகம் முழுவதும் பயணம் செய்யும் போது, இந்தியாவின் உலகளாவிய தாக்கத்தை நேரில் பார்த்திருக்கிறேன். தென்கிழக்கு ஆசியாவில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்றியுள்ளன. ஆப்பிரிக்கா கண்டத்தில், இந்தியாவின் நீண்டகால கூட்டாண்மை,  செழிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது. இந்தோ-பசிபிக் பகுதி முழுவதும், இந்தியா ஒரு தடையற்ற மற்றும் வெளிப்படையான  பிராந்தியத்தை மேம்படுத்த உதவுகிறது.