உங்கள் (பிரதமர் மோடி) தலைமையின் கீழ், இந்தியா உலகிற்கு தனது உதவிக்கரத்தை நீட்டியுள்ளது. ஆனால், தடுப்பூசி முயற்சியில் உங்கள் கருணையின் அளவு இதைவிட அதிகமாக இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, கோவிட்-19 தொற்றுநோய் உலகை மண்டியிட வைத்தபோது, வேறு சில நாடுகள் மருத்துவப் பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தன. ஐயா, தடுப்பூசிகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட சிறிய நாடுகளுக்குக் கூட சென்றடைவதை நீங்கள் உறுதி செய்தீர்கள். உங்கள் கருணையின் மூலம், அச்சம் இருந்த இடத்தில் நம்பிக்கையையும் அமைதியையும் கொண்டு வந்தீர்கள். நான் மீண்டும் சொல்கிறேன், இது ராஜதந்திரத்தை விட மேலானதாகும் . இது ஒரு உறவின் நடவடிக்கை . இது பகிரப்பட்ட மனிதாபிமான நடவடிக்கை .