“உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா ஆற்றல் தரும் கருவியாக இருக்கும் என்ற உலக நம்பிக்கையை நீங்கள் (பிரதமர் நரேந்திர மோடி) மீண்டும் கொண்டு வந்திருக்கிறீர்கள். பொருளாதார சீர்த்திருத்தத்தை விரைவுப்படுத்தும் திறனில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லை. சமூக சீர்த்திருத்த செயல் திட்டத்தையும் விரைவுப்படுத்தும் உங்களது திறன் தனிமைத் தன்மை வாய்ந்தது. நவீன வரலாற்றில் சமூக சீர்த்திருத்தத்தில் நீங்கள் காட்டிய வேகமும் அளவும் முன் எப்போதும் இல்லாதது. இந்தியாவை அடிப்படையிலேயே உருமாற்றியவர் நீங்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு அதிகாரம் பெறும் வாய்ப்புகள் அளிக்கப்பட்டது சமீப கால வரலாற்றில் இதுவே முதல் முறை. “அனைவருடன் இணைந்து அனைவருக்கும் மேம்பாடு” என்பதன் அர்த்தத்தை அவர் உண்மையாக உணர்த்தியுள்ளார் ”