கவுதம் அதானி, தலைவர், அதானி குழுமம்.
துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டை கருத்தொன்றி வடிவமைத்தது மாண்புமிகு பிரதமர்மோடி என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாட்டின் தொலைதூர மூலையில் உள்ள மாநிலம், உங்கள் கனவை எதிரொலித்து இந்தியாவின் தொழிலியல் அமைப்பை மாற்றியமைக்க மூலகாரணமாக அமைந்துள்ளது என்பதை எவரும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியாது. துடிப்பான குஜராத், உங்களது தொலைநோக்கின் முதலாவது அடையாளமாக திகழ்கிறது. வரையறுக்கும் உங்கள் புத்திக்கூர்மை, கோபுரம் போன்ற தொலைநோக்கு, முன் எப்போதும் இல்லாத அளவு முறை, ஒழுக்கத்துடன் கூடிய ஆளுகை, குறையில்லா அமலாக்கம் ஆகியவற்றை இந்த உச்சிமாநாடு எடுத்துக் காட்டுகிறது”