“நமது பிரதமர் குறித்து பல்வேறு விவரங்களை நான் தெரிந்து வைத்துள்ளேன். அவர் எப்போதுமே முழுவதுமாக தெரிந்து வைத்திருப்பார். நீண்டகாலத்துக்கு முன்பிருந்த தகவல்களையும் நினைவில் வைத்திருப்பார். தனது மனதை உடனடியாக தயார்படுத்திக் கொள்வார். வெளிப்படையான செயல்பாடுகளை மேற்கொள்வார். பணிகளை நீங்கள் முடிப்பதற்காக, உங்களுக்கு நெருக்கடி கொடுப்பார். பின்னணித் தகவல்களையும் அறிந்து வைத்துக் கொண்டு, உங்களை பல்வேறு விதமான பணிகளில் ஈடுபடுத்துவார். அவருடனான எனது அனைத்து எதிர்கால செயல்பாடுகளும் இவ்வாறே இருந்தது. இதனை தற்போதும் கூட, அவரிடம் காண முடியும்.