கிறிஸ்டோபர் எலியாஸ், தலைவர், சர்வதேச வளர்ச்சிப் பிரிவு, பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை
“ஆயுஷ்மான் பாரத் திட்டம் எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இத்திட்டம் நிதி பாதுகாப்பு அளிப்பதோடு, ஆஷா பணியாளர்கள் (அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்கள்), அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் துணை செவிலியர்கள் ஆகிய அடிப்படை சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கி ஆரம்ப நிலை சுகாதார முறையை வலுவடைய செய்துள்ளது. இத்திட்டம் தொடக்க கால கட்டத்தில் உள்ளது, திட்டம் தொடங்கப்பட்ட முதல் 100 நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது, இருப்பினும் இன்னும் பல லட்சம் மக்களை சென்றடையும் இலக்கை கொண்டுள்ளது இத்திட்டம்”.