துடிப்புமிக்க குஜராத்தில் இருப்பது மிகவும் சிறப்பானது. நாட்டிற்கான அவரது 2047 தொலைநோக்குப் பார்வை குறித்தும்,கடல்சார் துறைக்கு எவ்வாறு பொருந்துகிறது என்பது குறித்தும் பிரதமருடன் விவாதிக்க வாய்ப்பு கிடைத்தது சிறந்த கௌரவமாகும். பிரதமருடன் விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகும். மிகுந்த ஊக்கமளிக்கும் கொள்கைகள் பற்றி நான் சொல்ல வேண்டும், எங்கள் தொழில்துறையின் விவரங்கள் பற்றிய அவரது அறிவால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்.