"எதிர்பாராத வகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுமார் 1 மணி நேரம் செலவிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் மிகவும் செல்வாக்குமிக்க உலகத் தலைவராக திகழ்வதற்கு அவரது தொலைநோக்குப் பார்வையும், இந்திய மக்கள் மீது அவர் கொண்டுள்ள உறுதியான நிலைப்பாடும் விவரிக்க முடியாதது. வறுமையிலிருந்து மக்களை மீட்டெடுத்து அவர்களின் மேம்பாட்டுக்கு உதவுவதும், இந்தியாவை உலகின் வல்லரசாக மாற்றுவதுமே அவரது குறிக்கோள். அந்த குறிக்கோள் தற்போது நிறைவேறி வருகிறது"