சஞ்சய் மெஹ்ரோத்ரா, தலைமை நிர்வாக அதிகாரி, மைக்ரான் டெக்னாலஜி
பிரதமரை சந்திப்பது எப்போதும் சிறப்பானது. அவர் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர். இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்துவதில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பவர். எங்கள் சனந்த் திட்டத்தின் மூலம் நாங்கள் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சந்திப்பு இதற்காகவும், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்திக்கான தொழிலாளர்களைத் தொடர்ந்து அதிகரிப்பது குறித்த மைக்ரானின் சிறப்பு கவனத்திற்காகவும் நடைபெற்றது.