செமிகண்டக்டர்கள் எனப்படும் குறை மின்கடத்தி தொழில்துறையில் உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான தொலைநோக்கு பார்வைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நான் நன்றி கூறுகிறேன். குஜராத்தில் செமிகண்டக்டர் கட்டமைப்பு மற்றும் சோதனை தொழிற்சாலையை உருவாக்க மைக்ரான் உறுதிபூண்டுள்ளது. குஜராத்தில் எங்களது இந்தத் திட்டம் கிட்டத்தட்ட 5000 நேரடி வேலைவாய்ப்புகளையும் 15,000 கூடுதல் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று நாங்கள் மதிப்பிட்டுள்ளோம்.