சஞ்சய பாரு, எழுத்தாளர், அரசியல் விமர்சகர், முன்னாள் ஆசிரியர், எகனாமிக்ஸ் டைம்ஸ், ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் மற்றும் பிசினஸ் ஸ்டாண்டர்டு
“திரு. நரேந்திர மோடியுடன் அர்த்தமுள்ள விவாதத்தை மேற்கொண்டது அவர் குஜராத் முதலமைச்சராக இருந்தபோதும் நான் பிசினஸ் ஸ்டாண்டர்டு இதழின் ஆசிரியராக இருந்தபோதும்தான். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த அவரது பேட்டியில் குஜராத் மாநிலத்தின் பொருளாதாரம், குஜராத் சமூகம், அவரது எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். அவர் சேகரித்து வைத்திருந்த தகவல்கள், புள்ளி விவரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. வளர்ச்சிக்கு முக்கியமானவை என்னென்ன, சவால்களை எதிர்கொள்ள வேண்டியவை எவை என்பன குறித்த அவரது புரிதலும் என்னை வெகுவாகக் கவர்ந்தன. 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, வளர்ச்சி குறித்த அவர் காட்டிய கவனத்தை வரவேற்றேன்.”