சந்தா கோச்சார், நிர்வாக இயக்குநர் & தலைமை நிர்வாக அதிகாரி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி
இந்தியாவில் எப்போதும் இல்லாத வகையில்  மறைமுக வரிகளில் மிகவும் முக்கியமான சீர்திருத்தமாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (GST) சட்டம்  உள்ளது. பொருளாதாரத்தின் அனைத்துப் பிரிவுகளும் பயன் பெறும் வகையில் குறிப்பிடத்தக்க கட்டமைப்பு மாற்றத்தை அமல்படுத்துவதில் அரசின் உறுதிப்பாட்டை இது காட்டுகிறது. நடுத்தர காலத்தில் விலைகள் குறைவதை நுகர்வோர்கள் காண்பார்கள். வணிகங்கள் மிகவும் சிறப்பாக செயல்படும். அரசுக்கு வரி வருவாய் எளிதாவதுடன், வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.