உலகளவில், இந்தியாவின் 2023 ஜி 20 தலைமைப் பதவி பலதரப்பு கொள்கை முன்னுரிமைகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்திய பொருளாதாரம் கொவிட்ட தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துசக்தியாக மாறியுள்ளது.
இந்திய பொருளாதாரம், வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இருப்பதால், வரும் ஆண்டுகளில் அதன் இளம் மக்கள்தொகை, பௌதீக மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதலில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உறுதியாக இருப்பதால், சேவைகளின் ஏற்றுமதி அதிகரித்து வருவது தெரிகிறது. நடப்பு கணக்கு பற்றாக்குறை (சிஏடி) குறைவாக உள்ளது, மேலும் பாதிப்புகளை சமாளிக்க அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கப்படுகிறது.